முகப்பு /செய்தி /திருவள்ளூர் / கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..

கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..

தனியார் தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ

தனியார் தொழிற்சாலையில் பற்றி எரியும் தீ

Thiruvallur News : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நேமளூரில் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து. 9 மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தினறல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் ஊராட்சியில் கே.எஸ்.ஜே என்ற குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பல்வேறு நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு குப்பை கழிவுகள் இறக்குமதி செய்து அந்த கழிவுகளில் இருந்து இரும்பு பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் இரும்புகளை, இரும்பு கம்பிகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுசுழற்சி செய்ய இறக்குமதி செய்யப்படும் குப்பை கழிவுகள், மறுசுழற்சிக்கு பின்னர் வெளியேறக்கூடிய குப்பைக் கழிவுகள் இரண்டையும் தொழிற்சாலைக்கு உள்ளேயே முறைப்படுத்தாமல் கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகளும், மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பை கழிவுகளும் மளமளவென எரிய தொடங்கியது. இந்த கட்டுக்கடங்கா தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாய் காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் சிப்காட் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனாலும் இந்த தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் 9 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

Also Read:  தெருக்கூத்து பார்க்க சென்ற விவசாயி அடித்துக்கொலை.. முன்விரோத தகராறில் ஓசூரில் பயங்கரம்..

மேலும் பாதுகாப்பு கருதி அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் தீ பரவாமல் இருக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் நேமலூர், கண்ணன் கோட்டை, சிறுவடா, மாதர்பாக்கம், பாதிரிவேடு, பொம்மாஜி குளம் உள்ளிட்ட பல பகுதிகள் புகை மண்டலமாய் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் : பார்த்தசாரதி - திருவள்ளூர்

First published:

Tags: Fire accident, Local News, Tamil News, Thiruvallur