முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருவள்ளூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை... மது அருந்திவிட்டு சாவகாசமாக தப்பிச்சென்ற திருடர்கள்..!

திருவள்ளூரில் அடுத்தடுத்து 4 கடைகளில் கொள்ளை... மது அருந்திவிட்டு சாவகாசமாக தப்பிச்சென்ற திருடர்கள்..!

போலிசார் விசாரணை

போலிசார் விசாரணை

கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்த டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவளம்பேடு, கே.எஸ் சாலையில், புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு நோட்டமிட்ட  நான்கு பேர் கொண்ட கும்பல் மாங்கிலால் சேட் என்பவருக்கு சொந்தமான நகை கடை, அடகு கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த 10,000 ரூபாயை திருடி உள்ளனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றனர்.

அதேபோல் அருகில் இருந்த பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 15,000 ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் அருகாமையில் இருந்த இரண்டு மளிகை கடைகளில் இரும்பு கதவுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து ரூ. 10,000 எடுத்து சென்றனர்.

தொடர்ந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்த டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் மோப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Theft, Thiruvallur