ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

கனமழை எதிரொலி - திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எதிரொலி - திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 1) விடுமுறை அறிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருகிற 4-ம் தேதிவரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

  மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

  மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை கனமழை எதிரொலியால் விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Rain, School Leave