ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் பணியிடை நீக்கம்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் பணியிடை நீக்கம்!

ஆசிரியர் ராஜமுத்தெழில்

ஆசிரியர் ராஜமுத்தெழில்

Thiruvallur | திருவேற்காட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பெற்றோர் புகார் அளித்தையடுத்து, ஆசிரியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur), India

  திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பத்தாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளை அந்த வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்து, ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

  இந்த நிலையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் ராஜமுத்தெழில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே ஆசிரியர் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர்களும், மாணவிகளும் புகார் அளித்ததாகவும் அந்த புகாரின் பேரில் ஆசிரியர் குழு அமைத்து விசாரணை செய்து தற்போது அந்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது.

  Also see...திருப்பதி கொடியை தரிசனம் செய்யும் கூட்டத்தில் திருடிய பெண்கள் கைது

  இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கல்வித்துறை சார்பில் இருந்து முழுமையான நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருப்பார் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  செய்தியாளர்: சோமசுந்தரம், திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Government, School student, Sexually harassing, Teacher, Thiruvallur