ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருநின்றவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.. தாளாளர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

திருநின்றவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.. தாளாளர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவி ஒரு வருக்கு பாலியல் ரீதியான தொல்லை நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி சக மாணவ மாணவிகளிடமும் பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். அதை அடுத்து இன்று காலை பெற்றோர்கள் உறவினர்கள் உள்ளிட்ட 100 க் கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

  அப்போது பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வகுப்பறையை புறக்கணித்து சாலை மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சகாதேவன், ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ,  பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

  மேலும் சம்பவ இடத்திற்கு வந்து ஆவடி அனைத்து மகளிர் ஆய்வாளர் லலிதாவும் விசாரணை நடத்தினார். அப்போது பெற்றோர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் என்பவர் மாணவன் ஒருவனை தள்ளி விட்டதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் பள்ளி வளாகத்தில் கோஷங்களை எழுப்பி பள்ளியின் புதிய தாளாளர் வினோத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Also see...உதகையில் திடீரென வீடுகளில் ஏற்படும் விரிசல்.. கிராம மக்கள் அச்சம்... ஆய்வில் இறங்கிய புவியியல்துறை!

  பள்ளிக்குள் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷம் எழுப்பியபோது மாணவர்கள் சென்னை-திருப்பதி சாலையில் சென்று போராட முற்பட்டனர். அப்போது காவல் துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது போலீசார் மாணவர்களை தாக்கினர். இதில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

  அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆவடி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். திருநின்றவூர் காவல் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். கலைந்து சென்ற பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்று மீண்டும் தாளாளர் வினோத்தை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

  காவல்துறையினர் கோபிநாத் வேறு மாணவிகள் யாரிடமாவது இது போன்று ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வந்த நிலையில் பள்ளியின் புதிய தாளாளர் வினோத் கடந்த சில நாட்களுக்கு முன் தலைமறைவானார்.

  Also see... சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் கரூர் செங்கல் சூளையில் மீட்பு.. ஷாக் சம்பவம்!

  இப்போது அவர் கோவாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தாளாளரும் அவரது தந்தையுமான ஜெயராமனை  போலீசார் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல், பாலியல் ரீதியாக தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவடி துணை ஆணையர் மகேஷ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாகியுள்ள வினோத்தை கைது செய்ய கோவா விரைந்துள்ளனர்.

  பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பருவத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: பாரதசாரதி, திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Protest, School students, Sexual harassment, Thiruvallur