ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம்... போக்சோவில் கைதான தாளாளர் புழல் சிறையில் அடைப்பு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம்... போக்சோவில் கைதான தாளாளர் புழல் சிறையில் அடைப்பு!

கைதான பள்ளி தாளாளர் வினோத்

கைதான பள்ளி தாளாளர் வினோத்

திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின்  தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் புகார் எழுந்து நிலையில். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 7 மணி நேரத்துக்கு மேல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
 • Local18
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருநின்றவூரில் 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளராக உள்ள வினோத் என்பவர் இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

  பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்கதை ஆன நிலையில் மாணவிகள் சிலர் இவரின் பாலியல் தொல்லையை தாங்காமல் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மாணவி ஒருவரின் பெற்றோர் பள்ளியில் வந்து புகார் அளித்துள்ளனர்.

  ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர் என 100க்கும் மேற்பட்டோர், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த பிரச்சனை பெரிதானதை அறிந்த பள்ளி தாளாளர் வினோத் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

  Also see... தமிழகத்தில் 14.6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை... அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

  ஆனால் வினோத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக கூறிய நிலையில் அவர்களை போலீசார் வலுகட்டாயமாக கலைக்க முயன்றதால் போலீசுக்கும் போராட்டக்காரர்களுகும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மாணவர்கள் சிலரை போலீசார் தரதரவனை இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொளும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என  மாணவர்களும் பெற்றோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பள்ளியின் ஆசிரியர்கள் சிலரும் திருநின்றவூர் நகர் மன்ற தலைவர் உஷாராணி உள்ளிட்டோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனிடையே பள்ளியின் தலைவர் ஜெயராமனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் தாளாளர்  மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தாளாளர் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Also see... திருவண்ணாமலை தீபத்திருவிழா... 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை

  வழக்கு பதிவு செய்த திருநின்றவூர் போலீசார் தலைமறைவாக உள்ள பள்ளியின் தாளாளர் வினோத்தை ஆவடி துணை ஆணையர் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில், ஆவடி திருநின்றவூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தியாகராஜன் கோவாவில் வைத்து கைது செய்தனர்.

  நேற்று முன்தினம் கோவாவுக்கு சென்ற தனிப்படை போலீசார் இன்று காலை வினோத் குமாரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தற்போது வினோத்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

  இண்டஹ் வழக்கை விசாரித்த திருவள்ளுர் மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ராதேவி, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு அதிரடியாக உத்தவிட்டார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Pocso, School students, Thiruvallur