ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

தொடர் கனமழை.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு..!

தொடர் கனமழை.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு..!

புழல் ஏரி

புழல் ஏரி

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்தவகையில் புழல் ஏரியில் நேற்று 118 கன அடி நீர்வரத்து வந்த நிலையில் இன்று 1000 கன அடி வினாடிக்கு நீர் வரத்து வருகிறது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  புழல் ஏரிக்கு வினாடிக்கு 1000 கன அடி ஏரிக்கு நீர் வந்து நிரம்பியதால், 100 கன அடி வெளியேற்றப்பட்ட உபரி நீரானது நீர்வரத்து அதிகரித்ததால் 500 கன அடியாக திறக்க பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர்.

  சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம் செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய், கண்டிகை உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் கணிசமான நீர் வரத்தை பெற்று வருகின்றன.

  புழல் ஏரியில் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில் 2,738 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.20 அடி உயரம் கொண்ட ஏரியில் 18.64 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று 118 கன அடி நீர்வரத்து வந்த நிலையில் இன்று 1000 கன அடி வினாடிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

  இங்கிருந்து 100 கன அடி உபரி நீர்  வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதலாக 500 கன அடியாக வெளியேற்ற முடிவு செய்து பத்தரை மணி அளவில் திறந்து விட்டுள்ளனர்.

  Also see... பேடிஎம் மூலம் பணம் அனுப்புவதாக கூறி நூதன மோசடி.. இளம் பெண் உட்பட 2 பேர் கைது

  சென்னை குடிநீருக்கு நீரேற்று நிலையம் மூலம் வினாடிக்கு 159 கன அடி செல்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர் நிலைகளில் சேர்த்து மொத்தம் 11.75 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஐந்து நீர்த்தேக்கங்களில் தற்போது 7.18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Lake, Puzhal, Rainfall, Thiruvallur