ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

WATCH - நெடுஞ்சாலை நள்ளிரவில் தனியாக நடந்த குழந்தை.. சிசிடிவியில் வெளியான அதிர்ச்சி..!

WATCH - நெடுஞ்சாலை நள்ளிரவில் தனியாக நடந்த குழந்தை.. சிசிடிவியில் வெளியான அதிர்ச்சி..!

காணாமல் போன குழந்தை பத்திரமாக மீட்பு

காணாமல் போன குழந்தை பத்திரமாக மீட்பு

குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவர் நந்தகுமாரை, ஆவடி காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Poonamallee | Tamil Nadu

  பூந்தமல்லியில் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து காணாமல் போன குழந்தையை வேலூர் சிஎம்சி மருத்துவர் பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

  பூந்தமல்லியில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு 12 :10 மணியளவில் வேலூர் CMC மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் நந்தகுமார் என்பவர் போரூர் அய்யப்பந்தாங்கவில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து வேலுார் செல்வதற்காக காரில் பூந்தமல்லி பைபாஸ் சாலையை நோக்கி சவீதா மருத்துவமனைக்கு அருகே சென்று கொண்டிருந்தார்.

  அப்போது, எதிர்பாராத விதமாக நடுரோட்டில் 2 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு காரை நிறுத்தி குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தையின் பெற்றோர் அங்கிருக்கிறார்களா என தேடி பார்த்தார்.

  யாரும் வராததால் அச்சமடைந்த அவர், குழந்தையை காவல்நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்தார். அங்கு ஏற்கனவே குழந்தையை காணவில்லை என குழந்தையின் பெற்றோர் புகார் அளித்திருந்ததால் போலீசார், எளிதில் அவர்களை தொடர்பு கொண்டு 2 மணி நேரத்திலேயே குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர்.

  இதையும் படிங்க | ஜூஸில் விஷம் கலந்தது எப்படி? போலீஸாரிடம் நடித்துக்காட்டிய கேரள பெண்.. வீடியோ பதிவு செய்த போலீஸ்!

  இந்த நிலையில், இந்த குழந்தை காணாமல் போன சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் விளையாடி கொண்டே வீட்டில் இருந்து வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

  தொடர்ந்து காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் குழந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவர் நந்தகுமாரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழயுைம் வழங்கினார். மேலும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் இரவுப்பணியில் இருந்த தலைமைக்காவலர் மணிகண்டன், நசரத்பேட்டை காவல் ஆய்வாளர்  அன்புச்செல்வி மற்றும் ஆவடி காவல் கட்டுப்பாட்டறை காவலர்களையும் வெகுவாக பாராட்டினார்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Poonamallee Constituency, Rescued Baby