ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை.. மர்ம கும்பல் கைவரிசை

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை.. மர்ம கும்பல் கைவரிசை

கொள்ளை அடிக்கப்பட்ட வீடு

கொள்ளை அடிக்கப்பட்ட வீடு

Ponneri Theft news | பீரோ உடைக்கப்பட்டு வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு என அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ponneri, India

பொன்னேரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்ன வேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹிந்தி ஆசிரியர் வெங்கடேசன். இவரது வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் விஜயபாபு குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது வீடுகளை பூட்டி கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து இன்று அதிகாலை வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் திரும்பி வந்து பார்த்த போது இரண்டு வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து வாடகைதாரர் விஜயபாபுவிற்கு தகவல் கொடுத்துள்ளார். விஜயபாபு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதேபோல மேல் வீட்டில் இருந்த வெங்கடேசன் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு என அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் வீட்டில் மர்ம கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)

First published:

Tags: Local News, Tamil News, Thiruvallur