முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருத்தணியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது

திருத்தணியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது

கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையர்கள்

கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையர்கள்

Thiruthani Theft | திருத்தணியில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருந்த கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruttani (Thiruttani), India

திருவள்ளூரில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்து சென்ற சின்ன பாப்பா என்ற வயதான பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம கொள்ளையன் சின்ன பாப்பாவின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சின்ன பாப்பா திருத்தணி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் அவரது மேற்பார்வையில்  தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் பிடித்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் தங்கச் சங்கிலியை  பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் ராஜேஷ் மீது திருத்தணி காவல் நிலையம், ராணிப்பேட்டை மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், போன்ற காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது  தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் திருத்தணி அருகில் உள்ள பள்ளிப்பட்டு வட்டத்தில் வெளிகரம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி இடமிருந்து 7 சவரன் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன் கொள்ளையடித்து சென்றான்.இந்த வழக்கில் கொள்ளையனை பிடிக்க திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இதில் ஆந்திர மாநிலம் கார்வெட் நகரம் பகுதியை சேர்ந்த நாகராஜு என்ற வாலிபரை பிடித்தனர். பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கொள்ளையனிடமிருந்து 7சவரன் தங்கச் சங்கலியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருத்தணி மற்றும்  பள்ளிப்பட்டு ஆகிய 2 காவல் நிலையங்களில் வெவ்வேறு வழிப்பறி வழக்குகளில் ராணிப்பேட்டை மாவட்ட  மற்றும் ஆந்திர மாநில கொள்ளையர்கள் ஆகிய இருவரை கைது செய்து இவர்களிடமிருந்து 9 சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் தனிப்படை போலீசார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

செய்தியாளர்: சசிகுமார்

First published:

Tags: Crime News, Local News, Thiruvallur