ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

முதியவரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற டெம்போ ட்ராவலர்! - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற டெம்போ ட்ராவலர்! - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

விபத்தில் உயிரிழந்த முதியவர்

விபத்தில் உயிரிழந்த முதியவர்

தனது மகளை கல்லூரிக்கு வழியனுப்ப வந்த முதியவர் மகளின் கண்முன்னே உடல்நசுங்கி உயிரிழந்த பரிதாபம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Avadi | Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

  ஆவடி அருகே சிக்னலில் நிற்காமல் சென்று விபத்து ஏற்படுத்திய தனியார் நிறுவன வாகனம் முதியவரை சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்றதில், அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (68) தி.நகரில் உள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

  இவரது மகள் தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 6:30 மணி அளவில், மகளை ஆவடி செக்போஸ்ட் அருகே இறக்கிவிட்டு யூர்ன் அடித்து செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, ஆவடி செக் போஸ்டிலிருந்து ஆவடி நோக்கி சென்ற, பிரேக் பிடிக்காத தனியார் நிறுவன வாகனம் முதியவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி அவரை 100 மீட்டர் வரை இழுத்துச் சென்றது.

  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையும் படிங்க | நள்ளிரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து திருட்டு - 6 பேரை கைது செய்த திருப்பூர் போலீஸார்

  முதற்கட்ட விசாரணையில் டெம்போ ட்ராவலரை ஓட்டி வந்த ஓட்டுநர் காஞ்சிபுரம் மாவட்டம் பரணி சேரி பகுதியை சேர்ந்த தங்கராஜ் (27) என்பது தெரிய வந்தது. இவர், ஆவடியில் இருந்து தண்டலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி செல்ல டெம்போவை கொண்டு சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Accident, Avadi, Crime News, Death, Thiruvallur