Home /News /tiruvallur /

சாலையைக் கடக்க முயன்றபோது விபரீதம்.. அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்றபோது விபரீதம்.. அரசுப்பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

ஆவடி - சாலை விபத்து

ஆவடி - சாலை விபத்து

Tiruvallur | ஆவடியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவரை அரசு பேருந்து இடித்தது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் வசிப்பவர் மூர்த்தி (69). இந்நிலையில்  இன்று வீட்டிலிருந்து மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது பூந்தமல்லியில் இருந்து ஆவடியை நோக்கி சென்ற தடம் எண் 62 என்ற அரசு பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். 

    அப்போது மூர்த்தி மீது எதிர்பாராத விதமாக, பேருந்தின் இடதுப்புற முன் சக்கரம் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    Also see... சதுரங்க விளையாட்டின் ராஜா சிலுவை மகுடம் பெற்ற கதை தெரியுமா?

    விபத்தில் உயிரிழந்த தந்தை மூர்த்தி குடிபோதையில் இருந்ததாக போலீசார் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகன் ஓட்டுநர்களை தாக்க முயற்சி செய்தார். பின்னர் போக்குவரத்து போலீசார் அவரை சமாதானம் செய்து காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    செய்தியாளர்: கண்ணியப்பன், திருவள்ளுவர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Avadi, Bus, Dead, Government, Thiruvallur

    அடுத்த செய்தி