பூந்தமல்லியில் அரசுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 132 சென்ட் நிலத்தை அதிகாரிகளே முறைகேடாக ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வரதராஜபுரத்தில் உள்ள சர்வே எண் 162 ல் 60 கோடி மதிப்புள்ள விஸ்தீரணம் 1 ஏக்கர் 32 சென்ட் நிலத்தை திருப்பெரும்புதூர் வட்டாட்சியருக்கு 1987 ஆம் ஆண்டு
கோவிந்தராஜ் நாயுடு என்பவர் பூமி தானமாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் 1988 முதல் தற்போது வரையில் பல தனிநபர்களுக்கு போலியான ஆவணங்களை உருவாக்கி பட்டா மாற்றம் செய்த கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர் டி ஐ சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்.
பூமிதான நிலம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வரை பூமிதான துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தமிழ்நாடு நில சீர்திருத்த இயக்குனரக அலுவலக பொது தகவல் வழங்கும் அதிகாரி தகவல் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் தற்போது தனிநபருக்கு குறைந்த விலைக்கு மோசடியான ஆவணங்கள் உருவாக்கி பட்டா மாற்றம் செய்துள்ளார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 60 கோடி இருக்குமென தெரிய வருகிறது.
இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்
தமிழக அரசு பூமிதான நிலங்களை பாதுகாக்கவும் , ஆக்கிரமங்களை மீட்டு எடுக்கவும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். தாரை வார்க்கப்பட்ட அரசு நிலம் மீட்கப்படுமா, முறைகேடு பத்திரப்பதிவில் ஈடுபட்ட அரசுத்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவுத்துறை சார்பதிவாளர்கள் தண்டிக்க படுவார்களா என்பது கேள்வியாக உள்ளது.
இதனிடையே தற்போதைய பூந்தமல்லி வட்டாச்சியர் இது தொடர்பாக கூறுகையில், பூமிதான நிலத்திற்கான பட்டியல் தனியார் பெயரில் உள்ளது. இதனை ரத்து செய்யக் கோரி துணை ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
செய்தியாளர்: கண்ணியப்பன் - திருவள்ளூர்
உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.