முகப்பு /செய்தி /திருவள்ளூர் / இன்னைக்கு ஒரு புடி.. பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆடு, கோழி, மீன் என அசத்தலான விருந்து..!

இன்னைக்கு ஒரு புடி.. பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆடு, கோழி, மீன் என அசத்தலான விருந்து..!

அசைவ விருந்து

அசைவ விருந்து

Bjp meeting | நேற்று நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு தடபுடலாக விருந்து தயார் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம், அசைவ விருந்துடன் களைகட்டியது.

திருவள்ளூரில் நேற்று பாஜக மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பூண்டி ஒன்றியத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக-வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டனர். மேலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அஸ்வின்குமார், மாநில சமூக ஊடகப்பிரிவு தலைவர் நிர்மல்குமார், மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்தனன், செயலாளர் கருணாகரன், பன்னீர்செல்வம், ஆர்யா சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகளுக்கு மதிய விருந்தாக ஆட்டு எலும்பு ரசம், சிக்கன் வறுவல், சிக்கன் குழம்பு, மீன் வறுவல், மீன் குழம்பு, ஆம்லெட், சாம்பார், ரசம், கூட்டு என பல வகையான உணவு வகைகள் தடபுடலாக வழங்கப்பட்டதால் பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

First published:

Tags: BJP, BJP Meeting, Local News, Thiruvallur