Home /News /tiruvallur /

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து திமுக எம்.எல்.ஏ பேசியதால் பரபரப்பு..

காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து திமுக எம்.எல்.ஏ பேசியதால் பரபரப்பு..

திமுக இளைஞரணி கூட்டம்

திமுக இளைஞரணி கூட்டம்

Thiruvallur | திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அப்படி நினைத்தவர்கள் அழிக்க முடியாமல்  கடற்கரையோரம் சென்று விட்டனர் என கும்முடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசி பரபரப்பை  ஏற்படுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur, India
    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தனியார்  திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தாயகம் கவி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பேசுகையில், “ திமுகவை நூறு ஆண்டுகள் வழிநடத்த நம்மிடையே தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் தொண்டர்களை பாதுகாத்து மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம் திமுக.  எனவே திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைத்தவர்கள், முடியாமல் எத்தனையோ பேர் கடற்கரையோரம் சென்று விட்டனர்” என்றார்.



    Also see... புத்தர் சிலைக்கு முனியப்பன் பூஜை.. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுக்கும் பக்தர்கள்

    மேலும், “ காங்கிரசிலிருந்து எத்தனை பேர் அப்படி சொன்னவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் ” என்று பேசி ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
    பின்னர் தாயகம் கவி பேசுகையில் , “ கூட்டத்தில் முறையாக பங்கேற்காத இளைஞரணி நிர்வாகிகள் குறித்து பட்டியல் தயார் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என தெரிவித்தார்.

    செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: DMK, Thiruvallur

    அடுத்த செய்தி