Home /News /tiruvallur /

நியூஸ்18 செய்தி எதிரொலி : அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் வீடு தேடி வந்த அரசு அதிகாரிகள்

நியூஸ்18 செய்தி எதிரொலி : அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் வீடு தேடி வந்த அரசு அதிகாரிகள்

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலை குறித்த செய்தி நியூஸ்18 ஊடகத்தில் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமையின் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சிறப்பு செய்தி வெளியிட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS  உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், மருத்துவர் குழுவினர் நேரில் வந்து குழந்தையின் விவரங்களை சேகரித்து உடனடி மருத்துவ சிகிச்சைக்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதிகள்.இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டானியாவுக்கு 9 வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயதுவரை இயல்பாக வளர்ந்து வந்துள்ளார். பின்னர் குழந்தை டேனியாவின் முகத்தில் தோன்றிய கரும்பு புள்ளியால் அவருடைய வாழ்க்கை முழுவதுமாக தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.

  டானியாவின் முகத்தில் கரும்புள்ளி போன்று தோலில் தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர்கள் கடந்த 2017ம் ஆண்டுமுதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட 6க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடி தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பானது குறைந்த பாடில்லை. இதனால் டானியாவின் பெற்றோரான ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா தம்பதியினர் தங்களது சக்திகளுக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்தும் மருத்துவம் பார்த்து வந்து நிலையில் எந்த பயனும் இல்லை.

  நாட்கள் போக போக டானியாவின் முகம் வலது கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களோ ஒரு படி மேலே சென்று டானியாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.  இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பேசிய டானியாவின் தாய் சௌபாக்கியா , எல்லா குழந்தைகளை போலும் என் குழந்தையும் இயல்பாக இருந்தது. மூன்று வயதிற்கு மேல் சிறிதாக தோன்றிய கரும்புள்ளியை கண்டு அதனை குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது அப்பொழுது அங்கிருந்த டீன் எனகூறிகொண்ட மருத்துவர் ஒருவர் எனது மாணவி கரூரில் தோல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார் என கூறி பரிந்துரைத்துள்ளர்.

  இதையும் படிங்க: சாலையின் குறுக்கே வந்த மான்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம் - இளைஞர் உயிரிழந்த சோகம்

  இதனையடுத்து கரூரில் உள்ள மருத்துவர் கிருத்திகாவிடம் அழைத்துச் சென்று சுமார் ஓர் ஆண்டாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவர் கிருத்திகா பரிந்துரைத்த ஆயில்மெண்ட்டை 4 மாதங்களுக்கு மேலாக குழந்தையின் முகத்தில் தடவி வந்துதாகவும் பிறகு நாளடைவில் முகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட துவங்கியதாக வருத்தம் தெரிவித்தார்.  அதன் காரணமாக முகத்தின் சதைகள் சுருங்கி கருகிப் போனதால் பயந்து அந்த ஆயில்மெண்டை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு   பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள சென்ற நிலையில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாததால் மீண்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையை துவங்கியுள்ளனர் பெற்றோர்கள்.

  சிறுமி டான்யா


  டானியாவின் முகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக அவர் பள்ளி படிப்பை முழுவதுமாக பாதித்துள்ளது. பள்ளிக்கு செல்வதை தான் வெறுப்பதாகவும் குழந்தை நம்மிடம் வேதனையை வெளிப்படுத்தியது கண்ணீர் வரவழைப்பதாக அமைந்தது.

  ‘பள்ளியில் மாணவர்கள் தன்னுடன் அமர மறுக்கின்றனர், உணவு அருந்த விளையாட கூட வருவதில்லை’ என மனமுடைந்து கூறும் டானியா பள்ளியில் தான் தனிமையாகவே இருப்பதாகவும் இதன் காரணமாக பள்ளிக்கு செல்ல வெறுப்பாக உள்ளதாகவும் வேதனையுடன் கூறினார். சுதந்திர தினத்தன்று நடன போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்காமல் தனது பாதிப்பை காரணம் காட்டி அனைவரின் முன்னும் அவமானப்படுத்தி ஒதுக்கி விட்டதாக பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதன் காரணமாக பள்ளி படிப்பு தனக்கு வேண்டாம் எனவும் முகம் முழுவதுமாக குணமடைந்த பின்னரே பள்ளிக்கு செல்ல ஆசை உள்ளது எனவும் மனம் வேதனையை வெளிப்படுத்தினார்.

  சிறுமியின் நிலை குறித்த செய்தி நியூஸ்18 தொலைக்காட்சியில் வெளியான நிலையில்,  தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS அவர்கள் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மருத்துவர் குழுவினர் நேரில் வந்து குழந்தையின் விவரங்களை சேகரித்து உடனடி மருத்துவ சிகிச்சைக்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  செய்தியாளர் : கன்னியப்பன்
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: News18 Impact, Thiruvallur

  அடுத்த செய்தி