ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருவள்ளூர் வைத்திய வீரராகவ சாமி கோவில் நவராத்திரி விழா.. பார்வையாளர்களை கவர்ந்த கிருஷ்ணரின் 10 அவதாரங்கள்

திருவள்ளூர் வைத்திய வீரராகவ சாமி கோவில் நவராத்திரி விழா.. பார்வையாளர்களை கவர்ந்த கிருஷ்ணரின் 10 அவதாரங்கள்

நவராத்திரி விழா

நவராத்திரி விழா

thiruvallur | திருவள்ளூர் வீரராக சுவாமி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு கிருஷ்ணரின் நாட்டிய ஊஞ்சல் சேவை பரதநாட்டியத்துடன் கொலு அலங்காரம்  வைக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் அருள்மிகு வைத்திய வீரராகவ சாமி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இந்த கோவிலில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களை விளக்கும் தத்ரூப சிறப்பு கொலு பொம்மைகளும், மகாலட்சுமியின் அவதாரமும், மகாவிஷ்ணுவின் தசாவதார கோலம், ராமானுஜர் சாமி பிரம்மாண்ட சிலையுடன் வைக்கப்பட்டு இருந்தது.

  இது பார்வையாளர்களை  வெகுவாக கவர்ந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழாவை இந்திரா கல்வி குழுமத் தலைவர் இந்திரா தலைமையில் நவராத்திரி விழா நாட்டியாஞ்சலி  தொடங்கியது.

  இந்த விழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. அதேபோன்று திருவள்ளூர் நகரில் பழமையான கோவிலான பொம்மி அம்மன் உடனுறை முத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமர்ந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அவதாரத்திலும் கடைசி மூன்று நாட்கள் விஜய் தசமி வரை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். நவராத்திரி இறுதி நாளில் மாங்கல்ய, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

  வீரராகவ சாமி கோவில்.

  Also see... பந்த் எதிரொலி... தமிழகம் -புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தம்!

  பழமை வாய்ந்த கிராம தேவதை கோவிலான இந்த கோவிலில் 9  நாட்கள் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஊஞ்சல் சேவையில் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோளத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Navarathri, Thiruvallur