முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருவள்ளுர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரனை

திருவள்ளுர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரனை

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தனியார் விடுதி மற்றும் பள்ளியின் வார்டன் மற்றும் மாணவி உயிரிழந்த போது முதலில் பார்த்த மாணவிகள் உள்ளிட்ட  விடுதி நிர்வாகிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்தில் மேலும் விசாரனை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில்  பிளஸ் டூ மாணவி உயிரிழந்த  தனியார் விடுதியில் டெல்லியில் இருந்து வந்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கணூங்கோ மாவட்ட  ஆட்சியருடன் இன்று மாணவி உயிரிழந்த பள்ளியிலும், விடுதியிலும் நேரில் விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரி கிராமத்தில் தனியார் விடுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் டூ மாணவி கடந்த 25 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க காவல்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த சம்பவத்தையடுத்து நேரில் விசாரணை செய்ய இன்று டெல்லியில் இருந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கணூங்கோ குழு, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட  எஸ்பி செபாஸ் கல்யாண் மற்றும் சிபிசிஐடி போலீசார் உடன் நேரில் விசாரணை நடத்தினர். இந்த விசாரனை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. தனியார் விடுதி மற்றும் பள்ளியில் விசாரணையை முடித்துக் கொண்டு திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை குறித்து அதிகாரிகள் மட்டத்தில் உயர்மட்ட ஆய்வு நடைபெற்றது

தனியார் விடுதி மற்றும் பள்ளியின் வார்டன் மற்றும் மாணவி உயிரிழந்த போது முதலில் பார்த்த மாணவிகள் உள்ளிட்ட  விடுதி நிர்வாகிகளிடம் இன்று விசாரணை முடிந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்தில் டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய குழந்தைகள் பாதுகாப்பு  ஆணைய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

செய்தியாளர் பார்த்தசாரதி

First published:

Tags: Sucide, Thiruvallur