ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருவள்ளூரில் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருட்டு.. ஆதாரம் கொடுத்தும் போலீஸ் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்

திருவள்ளூரில் விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருட்டு.. ஆதாரம் கொடுத்தும் போலீஸ் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்

பைக் திருட்டு சிசிடிவி வீடியோ

பைக் திருட்டு சிசிடிவி வீடியோ

Thiruvallur | பூந்தமல்லியில் சர்வ சாதாரணமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் கொடுத்தும் போலீசார் விசாரணை செய்வதில்  அலட்சியம் காட்டி வருகின்றனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை மற்றும் படிப்பு காரணமாக ஏராளமானோர் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி வசித்து வருகிறார்கள். நாளுக்குநாள் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இந்த நிலையில் வாடகைக்கு இருப்பவர்கள் தங்களின் வாகனங்களை வீட்டிற்கு வெளியே வரிசையாக நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தினந்தோறும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த சைக்கிள்களை மர்ம  நபர்கள் சர்வ சாதாரணமாக திருடி செல்கின்றனர்.

  தினமும் தங்களது வாகனங்களை இழக்கும் உரிமையாளர்கள் பூந்தமல்லி போலீசாரிடம் புகார் கொடுத்தாலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்பதால் போலீசாருக்கு சிரமம் கொடுக்காமல் அவர்களே கண்காணிப்பு கேமரா காட்சிகளை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றாலும் அந்த காட்சிகளை வாங்கி கிடப்பில் போட்டு வைத்து விட்டு வாகனத்தை திருடிய நபர் குறித்து கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

  ' isDesktop="true" id="829165" youtubeid="pIafK5CZvIY" category="tiruvallur">

  குறிப்பாக பூந்தமல்லியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்படுகிறது. அது மட்டுமின்றி கனரக வாகனங்களும் திருட்டு போய் வருகிறது. இதுவரை வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் மட்டுமின்றி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொடுத்தாலும் அதில் உள்ள கொள்ளையர்கள் உருவங்களை வைத்தும் போலீசார் அவர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டாமல் அசட்டையாக இருந்து வருகின்றனர்.

  Also see... சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு - 2 சுரங்கப்பாதை மூடல்.. போக்குவரத்து மாற்றம்

  பூந்தமல்லி பகுதியில் தொடரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என வாகனங்களை இழந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் கூட பூந்தமல்லியில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சர்வ சாதாரணமாக திருடி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளார்: கண்ணியப்பன், திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bike Theft, Crime News, Thiruvallur