முகப்பு /செய்தி /திருவள்ளூர் / திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்தில் புகுந்த குரங்கு கூட்டம்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்தில் புகுந்த குரங்கு கூட்டம்.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்!

கோயில் கருவறைக்குள் புகுந்த குரங்குகள்

கோயில் கருவறைக்குள் புகுந்த குரங்குகள்

Thiruthani murugan temple | திருத்தணி முருகன் கோயிலில் ஏற்கனவே குரங்குகள் கடித்து 2 பேர் உயிரிழந்துள்ளதால் பக்தர்கள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Tiruttani (Thiruttani)

திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்தில் குரங்குகள் கூட்டம் புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

கடந்த 5ஆம் தேதி தைப்பூச திருவிழா முடிந்த நிலையில், ஏராளமான பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு படையெடுத்து வருகின்றனர். திருத்தணி மலைப்பகுதியில் அதிகளவில் குரங்குகளும் சுற்றி வருகின்றன. பக்தர்கள் அதிகமாக வரும் நாட்களில் குரங்குகளில் கடித்து இதுவரை 2 பேர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில், நேற்றும் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது கோயிலின் மூலஸ்தானத்திற்குள் குரங்குகள் புகுந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் எங்கு செல்ல வேண்டும் என தெரியாமல் முண்டியடித்து கொண்டு அலறியபடி ஓட்டம் பிடித்தனர். இதனை கண்ட கோயில் ஊழியர்கள் குரங்கை விரட்ட போராடினர். இதனால் கோயிலில் நடைபெற்ற பூஜை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சசிக்குமார், திருவள்ளூர்.

First published:

Tags: Local News, Monkey, Murugan temple, Thiruvallur, Tiruttani Constituency