ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

விளம்பர நடிகையை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

விளம்பர நடிகையை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த ஆட்டோ ஓட்டுனர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திருவள்ளூரில் விளம்பர மாடல் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur, India

விளம்பர நடிகையை வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கி  கூட்டாக  பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ ஒட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு காக்களூர் பைபாஸ் சாலையில் வசிக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளம்பெண் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட சிறு சிறு உள்ளூர் விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட விளம்பர நடிகையை ஆட்டோ ஓட்டுநரான விஜய் தனது இல்லத்துக்கு அழைத்துள்ளார். அவரும் சம்மதிக்க குடியிருப்புக்கு மத்தியில் உள்ள வீட்டில் விஜய் உடன் உற்சாக புத்தாண்டை கொண்டாட வந்துள்ளார். அவரது வீட்டில் விஜய்யின் நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகிய இருவர் இருந்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த இளம்பெண்ணை மதுபோதையில் மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப்பெண் புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)

First published:

Tags: Crime News, Local News, Sexual abuse, Sexual harrasment, Tamil News