முகப்பு /செய்தி /திருவள்ளூர் / பாம்பு கடித்து உயிரிழந்த 13 வயது சிறுமி… மூன்று மாதங்களுக்கு முன்பு வன்கொடுமை… இறப்பில் தொடரும் மர்மம்..!

பாம்பு கடித்து உயிரிழந்த 13 வயது சிறுமி… மூன்று மாதங்களுக்கு முன்பு வன்கொடுமை… இறப்பில் தொடரும் மர்மம்..!

வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற கோணத்தில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற கோணத்தில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற கோணத்தில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

திருவள்ளூர்: 8 வயது சிறுமியை 3 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவரின் வாட்ஸ்அப் வீடியோவால் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோவை எடுத்த நபர்கள் உட்பட பகிர்ந்தவர்களும் சிக்கியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்ததால் வீடியோ வெளியானதாக காவல்துறையினரின் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சோழவரம் அருகே உள்ள எருமை வெட்டிபாளையம் பகுதியில் செங்கல் சூளை ஒன்றில் தாய் தந்தை இல்லாத நிலையில் தனது தாத்தா அத்தையுடன் 8 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு 8 வயது சிறுமி பாம்பு கடித்ததில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது அந்த எட்டு வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், 8 வயது சிறுமி ஒருவரை 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை சிறுமியின் தாத்தாவிடம் அருகில் வசித்த நபர் ஒருவர் காட்டியுள்ளார்.

அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா இதைப்பற்றி தனது மகளிடம் கூறியுள்ளார். இது குறித்து அவர் உடனடியாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி விசாரணை மேற்கொண்டார். அதில், வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற கோணத்தில் அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எருமை வெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அந்த வீடியோவை எடுத்து பகிர்ந்ததாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

Also Read : அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்து... மருத்துவமனையில் அனுமதி

பின்னர், கண்ணனை கைது செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தியபோது கண்ணன் தனக்குத் தெரிந்த நபர்களான விஜயகுமார், சதீஷ், பாஸ்கர், ரமேஷ் ஆகியோருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோவை பகிர்ந்தது தெரியவந்தது. பின்னர், அவர்களையும் கைது செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, சோழவரம் காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், காசிமேடு பகுதியை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க பாலு எனும் முதியவர் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் காசிமேடு பகுதியில் இருந்து எருமை வெட்டிபாளையம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் பாலு தனது குடும்பத்தினருடன் வசித்து வருவதும் தெரியவந்தது. பின்னர், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் பாலு உட்பட வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் பரப்பிய 8 நபர்களையும் கைது செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(செய்தியாளர்- பார்த்தசாரதி)

First published:

Tags: Crime News, Minor girl, Sexual abuse, Tamil Nadu, Thiruvallur