திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம் நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் மைக் பிடித்து பேசிக் கொண்டிருந்தபோது திருத்தணி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் சதீஷ் அமைச்சரின் பின்பக்கம் சென்றுள்ளார். அப்போது தவறுதலாக அவர் கைபட்டு மைக் கீழே விழுந்தது.
Also see... 2588 கிமீ தூரம்.. ராமநாதபுரம் டூ லடாக்.. அரசின் இலவச சைக்கிளில் ட்ரிப் சென்ற இளைஞர்!
இதனால் ஆத்திரமடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவரை பின்பக்கமாக முதுகில் பலமாக தாக்கினார். உடனடியாக சதீஷ் மேடையில் இருந்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: சசி, திருத்தணி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister, MLA, Tiruttani Constituency