ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

96 படப் பாணியில்... 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்!

96 படப் பாணியில்... 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரில் உள்ள கே.இ.நடேச செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரில் உள்ள கே.இ.நடேச செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் ஆசிரியைகளுடன் 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன்  பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ செய்தது.

  1996 ஆம் ஆண்டு மாணவர்கள், மாணவிகள் தாங்கள் அரசு பள்ளியில் பயின்ற போது இருந்த அனுபவங்களை  நினைவுகூர்ந்து பேசினர். முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பரஸ்பரம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தங்களது ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்து அனைவருடன் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவது போல் உண்டு மகிழ்ந்தனர்.

  இந்த முன்னாள் மாணவர்கள்  சந்திப்பு நிகழ்ச்சியில் தாவரவியல் ஆசிரியர் ஜே பி ரங்கநாதன் தமிழ் ஆசிரியர் தனுஷ்கோடி, அறிவியல் பாட ஆசிரியை தனம், வணிகவியலாசிரியர் பிரபாகரன் இயற்பியல் ஆசிரியர் நாசர் பேக் உள்ளிட்ட 17 ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினர்.

  முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு

  முன்னாள் மாணவர்கள் தேவா நாராயணமூர்த்தி, துரைராஜ் பாலாஜி முன்னாள் மாணவிகள் ஆர் சுதா கல்பனா, ஜெகதீஸ்வரி ஷகிலா உள்ளிட்டோர் பங்கேற்று  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

  Also see... தலையணை, போர்வையில் கொடூர அழுக்கு.. ரயிலை நிறுத்திய பயணிகள்..!

  இந்த நிகழ்ச்சியில் தங்களது பெற்றோர் மாணவ, மாணவிகளாக மாறியதை பார்த்து  குழந்தைகள்  வியந்தனர். பெற்றோர்கள் தங்களது பாலிய வயது சினேகிதர்களை கண்டதும் 70ஸ் கிட்ஸ்-ல் இருந்து  2கே கிட்ஸ்க்கு மாறி செல்பி எடுத்துக் கொள்வது என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை சிறுவர்கள் ரசித்தனர்.

  செய்திய்யாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: School students, Teachers, Thiruvallur