ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு..! திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..

மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பு..! திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

நாளை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

வங்க கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு போர்க்கால நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தடையின்றி நடைபெறும் என்றும், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய திருவள்ளூர் மாவட்ட் ஆட்சியர், “மண்டஸ் புயலை எதிர்கொள்ள 63 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. புயல் கரையை கடக்கும் வரையில் அனைத்து முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read More : மாண்டஸ் புயல்.. 4 மணி நேரம் பேருந்து சேவை நிறுத்தம்.. உங்க ரூட் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

 மேலும் மீனவ கிராம மக்கள் வர மறுப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Thiruvallur