ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

7ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை முயற்சி.. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

7ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை முயற்சி.. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

வேர்கடலை கொடுக்க சென்ற சிறுமியை குண்டுகட்டாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Thiruvallur (Tiruvallur) | Tamil Nadu

  7ஆம் வகுப்பு மாணவியை தூக்கிச் சென்று காட்டு பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் திருத்தணி அருகே நிகழ்ந்துள்ளது.

  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே பேட்டை தாலுகாவை சார்ந்த தமாநெறி காலனி பகுதியில் வசிப்பவர் ஏழுமலை. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு ஊருக்கு வெளியில் ஒரு விவசாய இடம் உள்ளது. அந்த இடத்தில் அவர் வேர்கடலை பயிர் செய்துள்ளார்.

  இந்த நிலையில் நேற்று, ஏழுமலையின் 12 வயது மகள், பலருடன் சேர்ந்து பயிரை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த பஞ்சாட்சரம் (25) என்ற வாலிபர், வேர்க்கடலை வேண்டும் என சிறுமியிடம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியும் வேர்கடலையை கொடுப்பதற்காக அவரது அருகில் சென்றுள்ளார்.

  அப்போது அவர், திடீரென அந்த சிறுமியை ஆள் இல்லாத காட்டிற்கு தூக்கி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து ஓடி சென்று அவரிடம் இருந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும், பஞ்சாட்சரத்தை சரமாரியாக அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

  இதையும் படிங்க | ஹரியானா மாநிலத்தில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவன்

  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் பஞ்சாட்சரம் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பஞ்சாட்சரம் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  செய்தியாளர்: சசிக்குமார், திருவள்ளூர்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Arrest, Child Abuse, Crime News, Sexual abuse, Thiruvallur