Home /News /tiruvallur /

காதலன் வீட்டில் தகராறு.. சமரசம் பேச வந்த காவலரின் கையை கடித்த பெண்

காதலன் வீட்டில் தகராறு.. சமரசம் பேச வந்த காவலரின் கையை கடித்த பெண்

காவலரை தாக்கிய மணப்பெண்

காவலரை தாக்கிய மணப்பெண்

Tiruvottiyur | சென்னையில் காதலன் வீட்டிற்கு சென்று பெண் தகராறில் ஈடுபட்டதால் சமரச பேச்சு வார்த்தை நடத்த வந்த காவலரின் கையை கடித்து, சட்டையும் கிழித்த பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvottiyur, India
    சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திரன் என்பவரும், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செல்வியும் காதலித்து வந்தனர். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெண் வீட்டார் வரதட்சனை கேட்டதால் திருமணம் நின்றது. மாப்பிள்ளை வீட்டாரிடம் தகராறு செய்த மணப்பெண், தடுக்க வந்த காவலரின் கையை கடித்து சட்டையை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

    திருவொற்றியூர் எஸ்.பி.கோவில் பகுதியைச் சேர்ந்த ரேவேந்திரனும், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செல்வியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், செல்வி புதுவிதமாக தனக்கு  நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறி திருமணம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் விரக்தியடைந்த செல்வி, ரேவேந்திரன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட்டார். இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் காவலரை செல்வி வலது கையை பிடித்து கடித்ததுடன், சட்டையை பிடித்தும் கிழித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

    Also see... படிக்கட்டில் பயணம்.. மாணவர்களை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற பேருந்து

    இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ருக்மணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Love, Police, Thiruvottiyur Constituency

    அடுத்த செய்தி