முகப்பு /செய்தி /திருவள்ளூர் / பேட்டரி திருட்டில் கைதானவர் சொன்ன கொலை கதை.. அதிர்ந்த போலீஸ்..!

பேட்டரி திருட்டில் கைதானவர் சொன்ன கொலை கதை.. அதிர்ந்த போலீஸ்..!

குற்றவாளி கெல்லிஸ் என்ற விஜய்

குற்றவாளி கெல்லிஸ் என்ற விஜய்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நபர் மீது கொலை வழக்கையும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் மாவட்டம்கும்மிடிப்பூண்டி அருகே  பேட்டரி திருடியவரை காவல்துறையினர் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது  தான் ஒருவரை கொலை செய்து முப்புதரில் வீசியதாக அவர் கூறிய வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வாகனங்களில் பேட்டரி திருட்டு நடைபெறுவது அதிகரித்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையிலான தனிப்படை போலீசார் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தைச் சேர்ந்த கெல்லிஸ் என்ற விஜய் (21)  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது   போலீசாரிடம் விஜய் இருபது  நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தன்னை சிலர் தாக்கி தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்தார். மேலும் அதில் ஒருவரை சின்ன ஓபுலாபுரம்  அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் எதேச்சையாக சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

Read More நரபலி கொடுத்த உடலை சாப்பிட்ட தம்பதி.. கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

பின்னர் விஜய் அவரிடம் பேச்சுக்கொடுத்துஅருகில் இருந்த தனியார் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள முட்புதருக்கு  அழைத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாதபோது மதுவை ஊற்றி கொடுத்து அவர் மயங்கியதும் கையில் இருந்த பேனா கத்தியை கொண்டு   கழுத்தை அறுத்து கொலை செய்து பழிக்கு பழி வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் அளித்த விவரங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நபர் மீது கொலை வழக்கையும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் காவல் நிலைய போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர் . திருட்டு வழக்கில் கைதான விஜயின் இந்த வாக்குமூலம் போலீசார் நடுவே பரபரப்பை ஏற்படுத்தியது. புழல் சிறையில் உள்ள விஜயை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால் தான் கொலைக்கான முழு விவரம் என்ன யாரெல்லாம் இதில் ஈடுபட்டுள்ளனர், கொலை செய்ய உதவியவர்கள் யார் என்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : பார்த்தசாரதி..

First published:

Tags: Murder case, Thiruvallur