ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

ஆவடி மாநகராட்சியில் எளிதாக வரியை செலுத்த செல்போன் செயலி அறிமுகம்...

ஆவடி மாநகராட்சியில் எளிதாக வரியை செலுத்த செல்போன் செயலி அறிமுகம்...

ஆவடி S M நாசர்

ஆவடி S M நாசர்

Avadi Corporation | ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வரி செலுத்தும் செல்போன் செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Avadi, India

ஆவடி மாநகராட்சியில் 100 சதவீத வரி வசூலை உறுதிப்படுத்த புதிய  TN Urban E-sevai செல்போன் செயலியை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா மு.நாசர் அறிமுகம் செய்து வைத்தார் . இதன் மூலம், Debit Card /Credit Card / Net Banking / G Pay ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலமாகவும் வரியை  செலுத்தலாம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி வருவாய்த்துறையில் வரி வசூலில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு RTI தகவலின் அடிப்படையில் பிரத்தியேக செய்தி வெளியிட்டது அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் 4500 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யாமல் பின்தங்கியிருப்பதை  கள ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசின் பார்வைக்கு நியூஸ்18 தமிழ்நாடு செய்தியின் மூலம்  வெளிக்கொண்டு வந்து தீர்வும் கண்டது.

இந்நிலையில் இன்று ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால் வளத்துறை அமைச்சருமான ஆவடி சாமு நாசர் ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வரி செலுத்தும் செல்போன் செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக் கொண்ட 48 வார்டுகளில் சுமார் 81,822 குடியிருப்புகளுக்கு சொத்துவரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வரி வசூலை மாநகராட்சி அலுவலகம், திருமுல்லைவாயல்,காமராஜநகர் மற்றும் பட்டாபிராம் ஆகிய நான்கு வரிவசூல் மையங்கள் அமைக்கப்பட்டு வரி பணி நடைப்பெற்று வருகிறது.

இருப்பினும் சில பகுதிகளில் வசிக்கும் வரிவிதிப்புதாரர்கள் மேற்படி வசூல் மையங்களுக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே மேற்படி வரிவிதிப்புதாரர்களின் வசதிக்காகவும், இம்மாநகராட்சி வரி வசூலினை மேம்படுத்தும் பொருட்டும் அனைத்து வரியினங்களையும் கைபேசி மூலம் செலுத்தும் புதிய செயலி TN Urban Esevai" தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் வரிதாரர்கள் அனைவரும் தங்களுடைய இருப்பிடத்திலிருந்தவாறே கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி அனைத்து விதமான வரியினங்களையும் செலுத்த முடியும்.

கைபேசி செயலியை பயன்படுத்தும் வழிமுறைகள்:

1.முதலில் Google Play Storeல் "TN Urban Esevai" என்ற செயலியை Install செய்ய வேண்டும்.

2.பிறகு அதனை Open செய்து "Register Here" என்பதை Click செய்து உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

3.பின்பு Mobile Number, Password மற்றும் Captcha எண்ணையும் பதிவு செய்து உள்ளீடு செய்ய வேண்டும்.

4.பின்பு வரும் முகப்பு பக்கத்தில் Property taxயை Click செய்து Quick payment Optionயை தேர்ந்தெடுத்து உங்களுடைய சொத்துவரிவிதிப்பு எண்ணை பதிவு செய்து Search பட்டனை அழுத்த வேண்டும்.

5.பின்பு உங்களுடைய சொத்துவரி விவரங்கள் காண்பிக்கப்படும். பார்த்து பின்னர் Pay என்ற பட்டனை அழுத்தி உங்களுடைய வரியை Debit Card /  Credit Card / Net Banking / G Pay ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் வரி செலுத்தலாம்.

Read More: சோஷியல் மீடியா போஸ்ட்களுக்கு கட்டுப்பாடு இல்லையா? - சமூகவலைதள நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

 மேலும் வரி செலுத்தியவுடனேயே அதற்கான இரசீதும் உடனேயே வெளியாகும்.எனவே, இக்கைபேசி செயலியை நன்கு பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் சிரமங்களை தவிர்க்குமாறும், ஆவடி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: கன்னியப்பன்

First published:

Tags: Avadi, Tamilnadu government