Home /News /tiruvallur /

தம்பி மனைவியின் நகைகளை திருடி தோழிக்கு கொடுத்த அண்ணன்.. போலீஸ் விசாரணையில் கையும்களவுமாக சிக்கினர்

தம்பி மனைவியின் நகைகளை திருடி தோழிக்கு கொடுத்த அண்ணன்.. போலீஸ் விசாரணையில் கையும்களவுமாக சிக்கினர்

வீட்டிலேயே 550 சவரன் நகை திருட்டு

வீட்டிலேயே 550 சவரன் நகை திருட்டு

Thiruvallur news : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடி இளம்பெண்ணுக்குக் கொடுத்த நபர், அந்த பெண்ணுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India
    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் (வயது 40), இவரது தம்பி ராஜேஸ் (37). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர்கள் திருமணமாகி, தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகி இருந்தது. இதே போல ராஜேஸ் மனைவியின் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம்.

    மேலும், வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர், அவரது தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Must Read : போலி அரெஸ்ட் வாரண்ட் தயாரித்து மில் உரிமையாளரை கடத்த முயற்சி.. ஆந்திராவை சேர்ந்த 3 பேர் கைது

    சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய நபர் அதனை தோழியிடம் கொடுத்திருப்பது, பூந்தமல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - சோமசுந்தரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Gold Theft, Thiruvallur

    அடுத்த செய்தி