ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...!

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...!

மழை

மழை

chennai | சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7க்கு உட்பட்ட கொரட்டூர், பாடி ஆகிய தூய்மை பணியாளர்கள் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur (Tiruvallur), India

  சென்னை திருவள்ளூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

  இந்நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

  சென்னை புறநகர் பகுதியில் மாலை 6 மணிக்கு பிறகு மிதமான மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி திருமங்கலம், கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, அம்பத்தூர், மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆவடி,பட்டாபிராம் உள்ளிட்ட பகுதியில் தற்போதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

  இந்நிலையில் சென்னை பாடி சரவணா ஸ்டோர் அருகே மாநகராட்சி மண்டலம் 7 தூய்மை பணியாளர்கள் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Also see... Weather - Rain News Live: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  சரவணா ஸ்டோர் பேருந்து நிலையம் அருகே சுமார் 2 அடி அளவிற்கு தேங்கியுள்ள மழை நீரை தூய்மை பணியாளர் ஒருவர் தன்னுடைய கைகளாலும்  கம்பியால் மற்றும் குப்பைகளால் அடைபட்ட கால்வாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட அந்த காட்சிகள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  செய்தியாளர்: கண்ணியப்பன், திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Northeast monsoon