முகப்பு /செய்தி /திருவள்ளூர் / யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவி… குவியும் பாராட்டு

யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவி… குவியும் பாராட்டு

யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவி

யோகாசனத்தில் கின்னஸ் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவி

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி, கூர்மாசனம் எனும் யோகாசனத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gummidipoondi, India

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரன் - பிரியா தம்பதியரின் மகள் சஷ்டிகா, (வயது 18). பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஏழு ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

திருப்பூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி, (வயது25) என்ற இளம்பெண், கூர்மாசனம் எனும் யோகாசனத்தில், தொடர்ந்து ஒரு மணி நேரம் இரண்டு நிமிடம் இரண்டு வினாடிகள் நின்று கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை முறியடிக்கும் விதமாக, கும்மிடிப்பூண்டி மாணவி சஷ்டிகா, ஒரு மணி நேரம் ஆறு நிமிடம் ஒரு வினாடி, நின்று, கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

  

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ஏ.ஆர்.எஸ்., இரும்பு உருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர், மாணவி சஷ்டிகா, சாதனை படைக்க நிதி உதவி அளித்தனர்.

கையில் கத்தி, பைக்கில் சாகசம்.. ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சாதனை படைத்த மாணவி சஷ்டிகா, அவரது யோகா ஆசிரியர் சந்தியா, சாதனை படைக்க நிதி உதவி அளித்த தனியார் தொழிற்சாலையின் இயக்குனர் சத்யநாராயண மூர்த்தி ஆகியோரை கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் - பார்த்தசாரதி

First published:

Tags: Guinness, Thiruvallur