ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

குப்பை சேகரிக்க டைமிங் மிஸ் ஆகக்கூடாது.. இனி குப்பை லாரியில் GPS கருவி.!

குப்பை சேகரிக்க டைமிங் மிஸ் ஆகக்கூடாது.. இனி குப்பை லாரியில் GPS கருவி.!

குப்பை வண்டியில் ஜிபிஎஸ் கருவி

குப்பை வண்டியில் ஜிபிஎஸ் கருவி

இந்த மென்பொருள் மூலம் மாநகராட்சி அறையில் உள்ள பெரிய திரையில் 2 ஊழியர்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Avadi, India

  ஆவடி மாநகராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதியில் திட கழிவுகளை தூய்மை பணியாளர்கள் சரியான நேரத்தில் சேகரிக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் வாகனங்களில் GPS கருவி மற்றும் மென்பொருளை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 110 டன் அளவிலான திடக்கழிவுகள் குடியிருப்பு பகுதியில் இருந்து பெறப்பட்டு ராட்சத குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  ஆவடி மாநகராட்சி யில் உ ள்ள பட்டாபிராம், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயில், கோவில்பதாகை என மொத்தம்  48 வார்டுகள்  4  மண்டலமாக உள்ளன.

  இந்த பகுதியில் அன்றாடம் குடியிருப்பு பகுதிக்குச் சென்று 845 தூய்மை பணியாளர்களை காலை 6மணி முதல் பகல் 1 மணி வரையும், பிறகு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும்,  அதேபோல் இரவு 9மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 210 திடக்கழிவு  வாகனங்களுடன் சரியான நேரத்திற்கு தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கிறார்களா என துல்லியமாக கண்டறியவும், அந்தந்த பகுதியில் இருந்து எவ்வளவு எடையுள்ள  திடக்கழிவுகள் குடியிருப்பு பகுதியில் இருந்து பெறப்பட்டு சேக்காட்டில் உள்ள குப்பைகிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.

  தூய்மை பணியாளர் இயக்கம் வாகனத்தின் பெட்ரோல், டீசல் மற்றும் பேட்டரி வாகனத்தின் அளவினை இந்த மென்பொருள் மூலம் மாநகராட்சி அறையில் உள்ள பெரிய திரையில் 2 ஊழியர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும் .

  இதையும் படிங்க | Exclusive: "அடங்கி இருக்கணும்.. எரிமலையை எதிர்கொள்வேன்".. முரசொலி கட்டுரைக்கு காட்டமாக பதிலளித்த தமிழிசை!

  இதன் மூலம், மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்களில்  பெட்ரோல் டீசல் ஆகியவை திருடு போவதையும் துல்லியமாக கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் குடியிருப்பு பகுதியில் பொது  தேக்கமடைந்துள்ள திடக்கழிவுகளை அகற்றவில்லை என புகார் அளித்தால் சுகாதார ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்த பகுதியின் தூய்மை பணியாளரின் வாகனத்தை புகார் பெறப்படும் இடத்திற்கு அனுப்பி வைத்து கண்காணிக்கவும், இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Avadi, Chennai, Garbage