Home /News /tiruvallur /

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவம் - குண்டர் சட்டத்தில் 10பேர் சிறையிலடைப்பு

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை சம்பவம் - குண்டர் சட்டத்தில் 10பேர் சிறையிலடைப்பு

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். என்று ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த மனோகரன் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் 15 ஆம் தேதி குருவி மேடு என்னும் இடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென எதிரில் வந்த லாரி திட்டமிட்டு கார் மீது மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை அவரது மனைவி பிள்ளைகள் கண்ணெதிரே கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் மீஞ்சூர் காவல்துறையினர் ஏற்கனவே சுந்தர பாண்டியன், பத்மநாபன், அரவிந்த் குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்ததில் ஏற்பட்ட தொழில் போட்டியால் உருவான முன் விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    Also see... நல்லம்பள்ளி வனப்பகுதியில் இரண்டு சடலம் மீட்பு..விசாரணையில் காவல்துறை..

    இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் 10 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: ADMK, Crime News, Murder case, Thiruvallur

    அடுத்த செய்தி