Home /News /tiruvallur /

சைடிஷ் வாங்கித்தராத ஆத்திரத்தில் ரவுடியை கொலை செய்த நண்பர்கள் - திருவள்ளூரில் பயங்கரம்

சைடிஷ் வாங்கித்தராத ஆத்திரத்தில் ரவுடியை கொலை செய்த நண்பர்கள் - திருவள்ளூரில் பயங்கரம்

சைடிஷ் வாங்கித்தராத ரவுடி வெட்டி கொலை

சைடிஷ் வாங்கித்தராத ரவுடி வெட்டி கொலை

Thiruvallur : திருவள்ளூர் அருகே குடிக்க சைடிஷ் வாங்கித்தராத பிரபல ரவுடியை குடிபோதையில் நண்பர்களே இனைந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிக்கலை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி வேலு. இவர் அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களான செல்வா, கோகுல், ஸ்டாலின் ஆகியோருடன் ஒன்றாக மீறி மது அருந்தியுள்ளார்.  அப்போது மூவரும் சேர்ந்து ரவுடி வேலுவை அருகில் உள்ள கடையில் சைடிஷாக போட்டி வாங்கி தரக்கோரி கேட்டதாக கூறப்படுகிறது. வேலு வங்கித்தர மறுத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது வேலு, அதை வாங்கி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை மூவர் சேர்ந்து தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால், வேலுக்கு ஆத்திரம் வந்து அவர்களை அடிக்க தொடங்கியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மூவரும் சேர்ந்து, வேலுவை சரமாரியாக குடிபோதையில் வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பி உள்ளனர்.

    கொலையுண்ட வேலு மீது, ஏற்கனவே வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோன்று கொலை செய்த இன்னொரு நண்பரான வெள்ளாக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வா என்பவர் மீது செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    செல்வா எப்போதுமே தற்காப்புக்காக கத்தியுடன் வெளியே செல்வார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட வேலு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனது சொந்த ஊரான சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியில் நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இரண்டு கொலைகளை செய்துவிட்டு பிணையில் வெளியே வந்து திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலையில் தனது தாயாருடன் வாடகை எடுத்து தங்கி அப்பகுதியில் வெல்டிங் வேலைக்கு சென்று திருந்தி வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்தக் கொலை உண்மையாகவே குடிபோதையில் நண்பர்களால் செய்யப்பட்டதா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது தூதுவிட்டு கொலை செய்ய சொன்னார்களா? என்பது குறித்தும் செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வேலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நண்பரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூவர் மீது செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட ரவுடி


    Must Read : சேலத்தில் அரசு பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி...

    கொலை செய்து தப்பிய மூன்று நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டால்தான் எதற்காக இந்த கொலை செய்தார்கள் என்பது குறித்து உண்மை தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது .

    செய்தியாளர் - பார்த்தசாரதி, திருவள்ளூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Crime News, Murder, Thiruvallur

    அடுத்த செய்தி