அதிமுகதிருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையிலான மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் ஒற்றை தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கழக பொது செயலாளராக வேண்டுமென கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இரு அணிகளாக உள்ள ஓபிஸ், ஈபிஸ் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் அலுவலகத்தில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது.
அதில் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும், அவரே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமெனவும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மாலை 3 மணி அளவில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி அலெக்சாண்டர் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.