Home /News /tiruvallur /

ஆட்டோமேட்டிக் லாக்கால் விபரீதம்.. வீட்டில் தனியே சிக்கிக்கொண்ட நபர் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆட்டோமேட்டிக் லாக்கால் விபரீதம்.. வீட்டில் தனியே சிக்கிக்கொண்ட நபர் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர் - மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்

தீயணைப்பு வீரர் - மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்

வீட்டின்  ஆட்டோமேட்டிக் லாக் பூட்டிக் கொண்டதால் 2 வளர்ப்பு நாய்களுடன் சிக்கிக் கொண்ட மனநலம் பாதித்த நபரை 3  மணி நேரம் போராடி பத்திரமாக மீட்ட ஆவடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Avadi, India
    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகரில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்ய சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கதவின் ஆட்டோமேட்டிக் லாக் மூடிக்கொண்டதால் அண்ணாதுரை வீட்டுக்குள் சிக்கித் தவித்தார். அவருடன் இரண்டு வளர்ப்பு நாய்களும் சிக்கிக்கொண்டன.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தந்ததை அடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மேனுவள் ஹைட்ராலிக் உபகரணம் மூலம் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டிருந்த அண்ணாதுரையை கதவை உடைத்து சேதமில்லாமல் பத்திரமாக மீட்டனர்.

    Also see...  எலும்பை உறையச் செய்யும் பால்டிக் கடல் பனிக்கட்டியின் மீது ஓவியம்.. வியக்க வைக்கும் அமெரிக்க ஓவியர்!

    அவருடன் வீட்டுக்குள் சிக்கிக் குரைத்துக் கொண்டிருந்த இரண்டு நாய்களையும் தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீட்டுக்குள் சிக்கியிருந்த அண்ணாதுரை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    செய்தியாளர்: கண்ணியப்பன், திருவள்ளூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Fire, Thiruvallur

    அடுத்த செய்தி