Home /News /tiruvallur /

ஆவடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை

ஆவடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை

நீட் தோல்வியால் மாணவி தற்கொலை

நீட் தோல்வியால் மாணவி தற்கொலை

Neet Result: இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்ற  லட்சியத்துடன் இரண்டு ஆண்டுகளாக  லக்ஷ்ணா ஸ்வேதா நீட் தேர்வு எழுதி வந்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur, India
    திருமுல்லைவாயலில்  அரசு பள்ளி ஆசிரியையின் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆவடி அடுத்த  திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் அமுதா என்பவர் ஆவடி அருகே உள்ள அரசு பள்ளியில்  ஆசிரியராக பணிந்து வருகிறார், இவன் மகளான மாணவி லக்ஷ்ணா ஸ்வேதா  இன்று அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இவர் 2019 ஆண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில்  எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்ற  லட்சியத்துடன் இரண்டு ஆண்டுகளாக  லக்ஷ்ணா ஸ்வேதா நீட் தேர்வு எழுதி வந்தார்.  நீட் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியானது.

    இதையும் படிங்க: நீட் தேர்வு : மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

    இதில் மாணவி லக்ஷ்ணா ஸ்வேதா  தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த மாணவி, இன்று அதிகாலையில் ஹாலில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.   உடலை மீட்ட திருமுல்லைவாயில் காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்- கன்னியப்பன் - அம்பத்தூர்

    மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவி மையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Murugesh M
    First published:

    Tags: Neet, NEET Result, Suicide

    அடுத்த செய்தி