ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பில் யானையால் சிக்கல்.. வனத்துறை விசாரணை!

விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பில் யானையால் சிக்கல்.. வனத்துறை விசாரணை!

வாரிசு படபிடிப்பு தளத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட யானையால் பிரச்சனை

வாரிசு படபிடிப்பு தளத்தில் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட யானையால் பிரச்சனை

சென்னை அருகே, வாரிசு படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில், வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. வன உயிரின சட்டத்தின் படி அனுமதி பெறாமல் யானையை நடிக்க வைக்க முயன்றதாக புகார் எழுந்தது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை மிரட்டி, கேமரா உள்ளிட்ட உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து நாசரத் பேட்டை காவல் நிலையத்தில் படக்குழுவினர்  மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து     காவல்துறையினர் அங்கு உரிய அனுமதி பெறாமல் யானையை படப்பிடிப்பிற்கு பயன்படுத்தியதை விசாரணையின் போது கண்டறிந்தனர்.

  அத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அடித்ததுடன் கடத்திச் சென்று மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் வாரிசு பட  குழுவைச் சார்ந்த 3 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  வாரிசு படக் குழுவைச் சார்ந்த விஸ்வநாதன் சங்கையா, உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நசரத்பேட்டை காவல்துறையினரால்  காவல் நிலைய பினையில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிபிற்கு அனுமதி பெறாமல் யானையை  வைத்து சூட்டிங்கை முடித்துவிட்டு அதற்கான  அனுமதி சான்றை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஒரே நாளில் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் மத்திய  அரசின் முன் அனுமதியை பெறாமல் கோயில் விழாவிற்கு  யானை  கொண்டு செல்வதாக கூறி, யானையை ஈவிபி பிலிம் சிட்டியில் சூட்டிங்கிற்கு பயன்படுத்தியது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

  நான் செஞ்ச பாவம்... உடல்நிலை குறித்து உருக்கமாக பேசிய சீரியல் நடிகர் வேணு அரவிந்த்

  ஒரு இடத்தில் இருந்து யானையை  தனியார் ஒருவர் கோயில் விழா  உள்ளிட்டவைகளுக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால் கூட, மருத்துவமனைக்கோ புத்துணர்வு  முகாமிற்கு போகும் கோயில் யானைக்கு கூட  உரிய அனுமதியைப் பெற்று யானை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சான்று பெற்ற பின்னரே கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

  படப்பிடிப்பு தளம் போன்றவற்றில் யானையை பயன்படுத்தினால் அதனை அன்றாடம்  கண்காணிப்பதும் மிகவும் அவசியம். யானையை ஒரு இடத்திலிருந்து வேறு இடம் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி கட்டாயம் என்று சட்டம் உள்ள நிலையில் திரைப்பட சூட்டிங்கிற்கு விதிமுறைகளை மீறி கொண்டு வந்தது குறித்து வனத்துறையினர் முழுமையான விசாரணை நடத்திய பின்னரே உண்மை வெளிவரும்.

  நேற்று படப்பிடிப்பு முடிந்த பின்னர் யானையை பயன்படுத்திய  படக்குழு  அவசரமாக அனுமதியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Actor Vijay, Thiruvallur