Home /News /tiruvallur /

திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை....

திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை....

திருத்தணி - திமுக பிரமுக மோகன்

திருத்தணி - திமுக பிரமுக மோகன்

Thiruvallur | திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கொண்ட மர்மக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur, India
    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜெ ஜெ நகர் பகுதியில் வசிப்பவர் மோகன். இவர் திமுக உறுப்பினர் ஆவார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டுக்கு ஜெ ஜெ நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் மூன்று பேர் இவரை சரமாரியாக  முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அந்த பகுதி வழியாக வந்த  பொதுமக்கள் மோகன் உறவினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கொலை செய்து தப்பிய கொலையாளிகளை திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

    Also see... திருட வந்தவர்கள் சிசிடிவி-க்கு முத்தம் கொடுத்து சென்றதால் பரபரப்பு

    திமுக பிரமுகர் மரணம் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில்  பரபரப்பு நிலவுகிறது.இந்த கொலைக்கு சம்பந்தம் உடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: வி.சசிக்குமார், திருத்தணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, DMK, Murder, Thiruvallur

    அடுத்த செய்தி