ஹோம் /நியூஸ் /Tiruvallur /

சென்னையின் குடிநீர் ஆதரமான பூண்டி ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் - பொதுமக்கள் அச்சம்

சென்னையின் குடிநீர் ஆதரமான பூண்டி ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் - பொதுமக்கள் அச்சம்

பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த ஏரியில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் 1,194 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் ஆந்திரா கிருஷ்ணா நீர் பங்கீடு காரணமாக 590 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஏரியை சுற்றி உள்ள மீனவர் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக 20 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் டன் கணக்கில் சிறிய வகை முதல் பெரிய வகை மீன்கள் தண்ணீர் பறவைகள் செத்து மிதந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.

இதனால் பூண்டி நீர்த்தேக்கம் வழியாகச் செல்லும் கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். மேலும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மீன்கள் பறவைகள் செத்து கிடப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிதி நெருக்கடியால் நகராட்சி, மாநகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை.. அமைச்சர் கே.என்.நேரு

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பூண்டி புழல் ஏரிகளில் செத்து மிதக்கும் மீன்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு ஆய்வு: ஏரியில் போதிய நீர் உள்ள போதும் பெரிய அளவிலான மீன்கள் உயிரிழந்து துர்நாற்றம் வீசுவதால் வருபவர்கள் நடைபயிற்சி மேற் கொள்பவர்கள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

செய்தியாளர் : பார்த்தசாரதி, திருவள்ளூர்

First published: