Home /News /tiruvallur /

திருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... போலீசார் தீவிர சோதனை

திருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... போலீசார் தீவிர சோதனை

வெடிகுண்டு தேடுதல் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள்

வெடிகுண்டு தேடுதல் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள்

Bomb Threat | வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வேலம்மாள் போதி, வேலம்மாள் இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கும் மீண்டும் இன்றும் விடுமுறை அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India
    திருவள்ளூர் மாவட்டத்தில் வேலம்மாள் தனியார் பள்ளிக்கு இரண்டாவது முறையாக யு எஸ் ஏ செல்போன் எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்தி வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால் இன்று இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழக்கும் சிறப்பு நிபுணர்கள் தீவிர சோதனை ஈடுப்பட்டனர்.

    வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வேலம்மாள் போதி, வேலம்மாள் இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கும் மீண்டும் இன்றும் விடுமுறை அளித்துள்ளனர்.நேற்று செல்போனில் குறுஞ்செய்தி மூலம் பள்ளி நிர்வாகி துணை பிரின்சிபால் திலக் என்பவருக்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து உடனடியாக 3 பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மருதம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் மோப்பநாய் உள்ளிட்டவைகளுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் ஆபத்தை ஏற்படுத்தும் வன்ணம் பொருட்கல் கிடைக்காத நிலையில் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் புரளியென தெரிவித்துவிட்டு சென்றனர். மீண்டும் யு எஸ்ஏ செல்போனின் அதே எண்ணில் இருந்து இன்று வந்த குறுஞ்செய்தி வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால் இன்று இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வேலம்மாள் இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் மீண்டும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்...

    Read More : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.. ரூ.5000 ரொக்கப்பரிசு - தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு


    இதில் இருபதுக்கும் மேற்பட்ட கவரப்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் இரண்டாவது நாளாக பள்ளி நிர்வாகம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு எப்போதும் வேண்டுமானாலும் வெடிக்கும் என இரண்டாவது முறையாக குறுஞ்செய்தி வந்ததால் பள்ளி நிர்வாகத்தினர், காவல் துறையினர் எச்சரிக்கையுடன் பள்ளிக்கு விடுமுறை அளித்து தொடர்ந்து தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளி விடுதியில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் ஊழியர்கள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர். பள்ளி வளாகத்தில் உண்மையாகவே வெடிகுண்டு உள்ளதா அல்லது மீண்டும் போலி மிரட்டலா என்பது தெரியாமல் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Bomb, Thiruvallur

    அடுத்த செய்தி