சென்னை, மதுரவாயல் மண்டலம் -11, வார்டு 144 ல் பாரதியார் தெரு அரசு பள்ளி பின்புறம் 70 ஆண்டுகள் பழமையான கிணற்றை காணவில்லை என தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தேவேந்திரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பாரதியார் தெரு பகுதியில் சர்வே எண் 113/A..141/1A,114/ 2b உள்ள பழமை வாய்ந்த கிணறு 70 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் பழமையான அந்த கிணறு பாழடைந்து இருந்த சூழ்நிலையில் கடந்த மாதம் அந்த தெரு வழியாக தான் செல்லும்போது அந்த கிணறு அங்கு இருந்தது. ஆனால் தற்போது 1.8.2022 அன்று அந்த வழியாக தான் சென்றபோது முன்பிருந்த கிணற்றை காணவில்லை.
எனவே அந்த பகுதி மக்களை விசாரித்த போது அனைவருமே கிணறு தற்போது இல்லை என்று கூறியதாகவும் ஆகையால் காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தர வேண்டுமென சமூக அக்கறையுடன் கேட்டக்கொள்வதாக தேவேந்திரன் புகார் அளித்துள்ளார்.
மேலும் கிணறு இருந்த அந்த இடத்தில் தனிநபர் ஒருவர் ரப்பீஸ் போன்ற மணல்களை கொட்டி நிரப்பி கிணறு இருந்த சூவடே தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் எனவே கிணற்றை கண்டுபிடித்து தருமாறும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகார் அளித்துள்ளார். மேலும் கிணற்றை காணவில்லை என வடிவேல் பாணியில் புகார் அளித்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிணறு காணவில்லை என்பது குறித்து சமூக ஆர்வலர் தேவேந்திரன் கூறுகையில், “ கிணறு காணாமல் போனது தொடர்பாக தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். பொதுமக்கள் அதாவது ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அவர்கள் நல்லது மற்றும் துக்க காரியங்களுக்கு தண்ணீர் தேவைக்காக பயன்படுத்திய கிணற்றை தற்போது தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், பொது மக்கள் பயன்படுத்திய கிணற்றை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.
Also see... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...
மேலும் நீர், நிலம் ஆக்கிரமிப்பை அரசு சொல்வது போல் மீட்டு தர வேண்டும் எனவும் ஒரு காலத்தில் ஆதிதிராவிட பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திய கிணறு அந்த கிணறு எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர்: சோமசுந்தரம், பூந்தமல்லி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.