Home /News /tiruvallur /

சிறுமி டான்யாவை நேரில் சென்று சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிறுமி டான்யாவை நேரில் சென்று சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதிநவீன முக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை டான்யா 5 நாட்களுக்கு பிறகு ISOLATED ICU -வில் இருந்து சாதாரண வார்டுக்கு இன்று மாற்றப்பட்ட நிலையில் முதலமைச்சர்
    மு க .ஸ்டாலின் அவர்கள் குழந்தையை டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி டான்யா. அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை நியூஸ் 18 தமிழ்நாடு சிறப்பு செய்தி வெளியிட்ட நிலையில், அதன் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட மாவட்ட மருத்துவ குழுவினர் நேரில் வந்து குழந்தை டான்யாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். உடனடியாக டான்யா தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் உள் நோயாளியாக கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    CTமற்றும் MRI ஸ்கேன் மற்றும் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி 9 மணி நேர உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  சிகிச்சை முடிந்த பின்னர், சிறுமியின் தாயாரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும், சிறுமியை நேரில் வந்து பார்ப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில், சிறுமி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர், சிறுமியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், அவரை நலம் விசாரித்ததோடு விரைந்து நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin

    அடுத்த செய்தி