முகப்பு /செய்தி /திருவள்ளூர் / மனைவியுடன் ஷாப்பிங்.. பைக்கை வழிமறித்து கணவனை வெட்டிக்கொன்ற கும்பல்.. திருவள்ளூரில் பரபரப்பு!

மனைவியுடன் ஷாப்பிங்.. பைக்கை வழிமறித்து கணவனை வெட்டிக்கொன்ற கும்பல்.. திருவள்ளூரில் பரபரப்பு!

கொலையான நபர்

கொலையான நபர்

Thriuvallur crime news | முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், முன்னாள் காதலரை 2 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Puzhal | Thiruvallur (Tiruvallur)

புழலில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை ஆட்டோவில் வந்த மர்மகும்பல் அவரது மனைவியின் கண்முன்னே வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்த சுதாசந்தர் (22 ) தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். இவர் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஷாப்பிங் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் திடீரென சுதாசந்தரின் பைக்கை வழிமறித்து கண், முகம், கை, கால் என சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது. இதில் திகைத்து போன மனைவி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முன்னாள் காதலரான சுதாசந்தரை திருமணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த அசம்பாவிதம் அரங்கேறியதாகவும், தனது பெற்றோர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி, திருவள்ளூர்.

First published:

Tags: Crime News, Murder, Thiruvallur