ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீச்சு.. காவல்துறை விசாரணையில் தெரிய வந்த உண்மை

பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீச்சு.. காவல்துறை விசாரணையில் தெரிய வந்த உண்மை

திருவெற்றியூர் பிஜேபி பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

திருவெற்றியூர் பிஜேபி பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

Tiruvottiyur | சென்னை திருவொற்றியூர் பிஜேபி பிரமுகர் வீட்டில் மர்ம நபர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruvottiyur, India

  சென்னை திருவொற்றியூர் தேரடியை சேர்ந்தவர் ரவி. இவர் பாஜக கட்சியில் மண்டல தலைவராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ரவி வீட்டில் கண்ணாடி ஜன்னல் மீது கல்லை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் ரவி அவரது மனைவி மற்றும் மகள் வீட்டில் இருந்துள்ளனர்.

  இந்நிலையில் கண்ணாடி துகள்கள் அவர்கள் மீது விழுந்ததாகவும் இதனால் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்த நிலையில்  ரவி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் காவல்துறையினர் அந்த  பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து கல் வீசியவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த பொழுது 3 சிறார்கள் விளையாட்டுத்தனமாக கல் வீசி விளையாடினர்.

  இதில் ஒரு கல் தவறுதலாக அந்த வீட்டிலன் ஜன்னல் கண்ணாடியில் பட அது உடைந்தது. இதனால் அந்த சிறார்கள் பயந்து அங்கிருந்து ஓடி சென்றனர். அந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த 3 சிறார்களை அழைத்து விசாரணை செய்ததில் இது போன்று நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.

  Also see... சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..! சாலையில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி

  இந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெறவில்லை என்றும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக நடந்துள்ளதால் காவல்துறையினர் அந்த  சிறார்களின் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

  செய்தியாளர்: அசோக் குமார், திருவொற்றியூர் 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: BJP, Crime News, Thiruvotriyur