ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

திருவள்ளூரில் லாரியை ஏற்றி தம்பியை கொலை செய்த அண்ணன் கைது 

திருவள்ளூரில் லாரியை ஏற்றி தம்பியை கொலை செய்த அண்ணன் கைது 

லாரி ஓட்டுநர் கைது

லாரி ஓட்டுநர் கைது

Crime news : திருவள்ளூரில் லாரி ஏற்றி ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் புழல் -  அம்பத்தூர் சாலையில் கடந்த  மாதம் 21- ம் தேதி  தனியார் பள்ளி அருகே வட மாநில லாரி ஒன்று  சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இரண்டு ஓட்டுனர்கள் இருந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரப்பட்ட மற்றொரு ஓட்டுநர் திடீரென லாரியை இயக்கி முன்னாள் நின்று கொண்டிருந்த மற்றொரு டிரைவரின் மீது லாரியை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே, அவர் உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து புழல் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் இறந்த லாரி ஓட்டுனர் புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர் 2வது  தெருவை சேர்ந்த சேர்ந்த சீனிவாசன் (வயது 50) என்பது தெரியவந்தது.  லாரியை ஏற்றி கொலை செய்த டிரைவர் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டார் . இந்த வழக்கில் கொலையாளியை  உடனே பிடிக்க கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வந்தனர். இந்நிலையில் புழல் பகுதியில் சுற்றி திரிந்த திருச்சி, காட்டூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் பிச்சையப்பா ( வயது 58) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினரின் விசாரணையில் லாரி ஏற்றி கொல்லப்பட்ட சீனிவாசன் தம்பி என்பது தெரியவந்தது.  இருவரும் மதுபோதையில் இருந்த‌போது ஏற்பட்ட வாய்த்தகராறு கொலையில் முடிந்ததாக தெரிய வந்தது. பின்னர் பிச்சையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)

First published:

Tags: Chennai, Crime News, Murder, Puzhal, Tamil News, Thiruvallur