Home /News /tiruvallur /

ரயில் தண்டவாளத்தில் ஐஐடி மாணவி சடலமாக மீட்பு.. அடையாரில் இருந்து ஆவடி வந்தது ஏன்? - போலீஸார் தீவிர விசாரணை

ரயில் தண்டவாளத்தில் ஐஐடி மாணவி சடலமாக மீட்பு.. அடையாரில் இருந்து ஆவடி வந்தது ஏன்? - போலீஸார் தீவிர விசாரணை

ஆவடி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவி...

ஆவடி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவி...

Avadi | ஆவடி அருகே சென்னை IIT கல்லூரி  மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Avadi, India
    சென்னை ஆவடி அருகே ரயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தலை மற்றும் முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனை அவ்வழியே வேலை செய்து வந்த ரயில்வே பணியாளர்கள் கவனித்து  ரயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள்  இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடந்திய விசாரணையில் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பெண்  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரது மகள் மேகாஶ்ரீ (30) என்பது தெரியவந்தது. திருமணமாகாத இவர் டெல்லியில் எம்.டெக் மற்றும் முதுகலை (Phd) பட்டம் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

    இவர் தற்போது சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி மைய விடுதியில் தங்கி ஐ.ஐ.டி கல்லூரியில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அடையாற்றில் பயின்று வரும் மாணவி மேகா ஸ்ரீ எதற்காக இங்கு வந்தார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Also Read:  100க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்த கோவை பெண் காவலர்.. குவியும் பாராட்டுக்கள்

    மாணவி  யாரையேனும் சந்திக்க ரயிலில் செல்லும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது வேறு எதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் ஆவடி இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை ஐ.ஐ.டி கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் ஆவடி தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Avadi, Commit suicide, Crime News, Thiruvallur

    அடுத்த செய்தி