ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்ட அளவை முடிவு செய்த அதிகாரிகள்..!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்ட அளவை முடிவு செய்த அதிகாரிகள்..!

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

Chembarambakkam lake | அதிக அளவில் உபநீர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 23 அடியில் வைத்து கண்காணிக்க முடிவு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Thiruvallur (Tiruvallur) | Tamil Nadu

  சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையால் நிரம்பி விடும். இதனால், ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

  இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியானது கோடையிலும் நிரம்பி காணப்பட்டது. மேலும் தினமும் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வந்ததால் ஏரியில் இருந்த நீரானது குறைந்து வந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

  நேற்று கனமழையின் காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் உள்ள நிலையில், தற்போதைய உயரம் 21.04 அடியாகவும், மொத்த கொள்ளளவு  3645 மி.க அடியில் தற்போது 2864 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 539 கன அடி ஆகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 145 அடியாகவும் உள்ளது.

  இதையும் படிங்க | தீபாவளி பண்டிகைக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்!

  தொடர்ந்து உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் தூர்வாரி தயார் நிலையில் இருப்பதாகவும் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை கால்வாய்களில் அதிக அளவில் உபநீர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 23 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

  செய்தியாளர்: சோமசுந்தரம்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chembarambakkam Lake, Chembaramkkam