ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடநாட்டு இளைஞர்கள் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடநாட்டு இளைஞர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur | Tamil Nadu

  திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

  திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதாப் மகன் கௌதம் (26), ஏத் மகன் அமீத்பண்டிட் (23)  ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர்.இதனால் தொழிற்சாலைக்கு அருகிலேயே இவர்கள் இருவரும் வீடு எடுத்து தங்கி, அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் மணவாளநகர் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், எஸ் ஐ.சுரேஷ் தலைமையிலான போலீசார் பாப்பரம்பாக்கம் சென்று சோதனை செய்தனர்.

  அப்போது இருவரும் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதை கண்டுபிடித்தனர். இதனைடுத்து கஞ்சா செடி வளர்த்த கௌதம் மற்றும் அமீத் பண்டிட் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா செடியையும் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: பார்த்தசாரதி (திருவள்ளூர்)

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Arrest, Cannabis, Thiruvallur